கொள்ளையர்களின் கூடாரமாகும் நெல்லை: பொதுமக்கள் பீதி
நெல்லை: நெல்லை மாநகரம் திருடர்களின் கூடாரமாக மாறி வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நெல்லை மாநகரத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஜநகர், அன்பு நகர், தியாகராயநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இரவு 7 மணிக்கு மேல் அந்த பகுதியில் பெண்கள் நடந்து செல்ல முடியவில்லை.
நேற்று முன்தினம் சேவியர் காலனியில் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளும், ரகுமத் நகரில் 19 பவுன் நகைகளும் திருடப்பட்டுள்ளன. டக்கரம்மாள்புரததில் உள்ள ஒரு வீட்டு உரிமையாளரிடம் ரூ.15 ஆயிரம் திருட்டு போனது.
மகாராஜநகர் ரவுன்டானாவில் இருந்து ஐ.ஓ.பி..காலனி, கல்யாணி நகர், ஸ்டேட் பாங்க் காலனி, பொன்மணி காலனி போன்ற பகுதிகளில் வசிக்கும் பெண்கள் வழிப்பறி சம்பவங்களுக்கு பயந்து ஆட்டோவில் செல்கிறார்கள். பைக்கில் வந்து பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபடும் கொள்ளையர்கள் நகைகளை பறித்து கொண்டு நான்குவழி சாலை வழியே தப்பிச் செல்கின்றனர். மாலை 6 மணிக்கு மேல் அங்கிருந்து பைக்கில் வந்து மகாராஜநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை நோட்டம் விடுகின்றனர்.
அங்குள்ள ஒரு மெட்ரிகுலேசன் பள்ளி பகுதியில் பதுங்கியிருந்து அவ்வழியாக வரும் பெண்களிடம் நகைகளை பறித்துச் செல்கின்றனர். கடந்த 10 நாட்களாக மகாராஜநகர் ரவுன்டானா அருகேயுள்ள ஏ.டி.எம். அமைந்துள்ள பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் நடமாடி வருகின்றனர். இவர்கள் பணம் எடுப்பவர்களை பின் தொடர்ந்து சென்று அவர்களைத் தாக்கி பணத்தைக் கொள்ளையடித்துச் செல்கின்றனர்.
கமிஷனர் அலுவலகம், டி.ஐ.ஜி. பங்களா போன்ற உயர் அதிகாரிகள் இருக்கும் பகுதிகளில் கூட கொள்ளையர்கள் துணிச்சலாக நடமாடுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications