கிருஷ்ணகிரி அருகே கிராம உதவியாருக்கு அடி உதை-மணல் கடத்தல் கும்பல் அட்டகாசம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம உதவியாளர்களை மணல் கடத்தல் கும்பல் அடித்து உதைத்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் இட்டிக்கல் அகரம் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, வருவாய் ஆய்வாளர் முனுசாமி தலைமையில் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் கடத்தல் வாகனம் சிக்கவில்லை.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் இட்டிக்கல் அகரம் வருவாய் கிராம உதவியாளர்களாக இருக்கும் கோவிந்தசாமி (46), துரைராஜ் (48) ஆகியோர் மணல் கடத்தல் வாகனங்களை கண்டுபிடித்தனர்.
இது குறித்து அவர்கள் தங்களது மேல் அதிகாரிகளுக்கு தகவல் சொல்ல முயன்ற போது 7 பேர் கொண்ட கும்பல் அவர்கள் இருவரையும் அடித்து உதைத்தது.
இதில் படுகாயம் அடைந்த அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துமனையில் சிகிசைச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தாக்குதல் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து முனியப்பன், ராமசாமி ஆகிய இருவரை கைது செய்தனர்.
கடந்த வாரத்தில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் மணல் கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக வருவாய் அதிகாரிகளை மிரட்டிய சம்பவம் பெரும் புயலை கிளப்பியது குறிப்பிடதக்கது. இந்தநிலையில் கிராம உதவியாளர்ளை மணற் கொள்ளையர்கள் தாக்கியுள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications