தமிழகம் முழுவதும் இன்றும் மழை பெய்யலாம்-வானிலை மையம்
சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றுபிற்பகல் வரை நல்ல மழை பெய்தது. சென்னை நகரம் இந்த ஒரு மழைக்கே பெரும் வெள்ளக்காடாகிப் போனது.
பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மரங்கள் விழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 சென்டி மீட்டரும், மீனம்பாக்கத்தில் 4 செ.மீ மழையும் பெய்தது. செம்பரம்பாக்கத்தில் 7 செ.மீ. மழை, பொன்னேரி, பூண்டி ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை விமான நிலையம், திருவள்ளூர் செங்குன்றம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னையை அடுத்த ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மீனம்பாக்கம், பரங்கிமலை, பெருங்குடி, மேடவாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
ஆதம்பாக்கம் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆதம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தேங்கி இருந்த தண்ணீரும் கால்வாய்களில் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. பின்னர் பள்ளமான பகுதிகளில் மணல் போடப்பட்டு மேடாக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரளாவில் கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாகவும் தமிழ்நாட்டில் உள்ள வெப்ப சலனம் காரணமாகவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தமட்டில் சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் சென்னையில் லேசான வெயில் அடித்து வருகிறது. சில நேரங்களில் வானம் இருட்டி வருகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications