மது அருந்தாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும்: அன்புமணி
சிதம்பரம்: இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மது அருந்தாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகிவிடும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.
சிதம்பரம் நகரில் பாமக பிரமுகர் திருமணத்தை நடத்தி வைத்து அவர் பேசுகையி்ல்,
இளைஞர்கள் போதை, புகை பழக்கம், மது அருந்துதல் போன்றவைகளை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாசும், நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
புகை பிடித்தல், போதை பழக்கம் மிகவும் கவலைக்குறிய விஷயம்.
அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் கூலி தொழிலாளி, மாலை நேரத்தில் தன் குடும்பத்தினரை மறந்துவிட்டு, வாங்கிய ஊதியத்தை மதுவுக்காக செலவழிக்கிறான். இதனால் அவன் மட்டும் அழியவில்லை. தன்னை சார்ந்து இருக்கும் குடும்பத்தையே அழிக்கிறான்.
சமீபத்தில் ஒரு ஆய்வு முடிவில், இன்னும் 5 ஆண்டுகளில் 18 வயதுக்கு வந்த அனைவரும் மது அருந்த ஆரம்பித்து விடுவார்கள். ஒரு கிராமத்தை ஆய்வு செய்தால் குறைந்தது 5 அல்லது 10 இளைஞர்கள்தான் மது அருந்தாமல் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மது அருந்தாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும் சூழல் உள்ளது.
ஆகவே இளைஞர்கள் நல்லொழுக்கத்தை கடைபிடித்து, தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக வேண்டாம் என கேட்டுகொள்கிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications