இடம் பிடிக்கும் தகராறும்: ஓடும் ரயிலில் இருந்து 2 வயது சிறுமி தாக்கி வீசி கொலை

Subscribe to Oneindia Tamil

லக்னெள: இடம் பிடிக்கும் தகராறில் ஓடும் ரயிலில் இருந்து 2 வயது குழந்தையை நான்கு பேர் கும்பல் தூக்கி வீசி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் கிஷோர். இவர் தன் மனைவி புல்குமாரி, 2 வயது மகள் நிஷா ஆகியோருடன் ஜான்சி ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

வழியில், ஒரு இடத்தில் ஏறிய 4 பேர் ராம்கிஷோர் குடும்பத்தினர் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தனர். ராம்கிஷோர் குடும்பத்தினரை வேறு இடத்துக்குப் போகுமாறு மிரட்டினர்.

இதற்கு ராம்கிஷோர் மறுக்கவே அவுருக்கும் 4 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது ராம்கிஷோரையும், புல்குமாரியையும் சரமாரியாக தாக்கிய அந்த 4 பேர் கும்பல், 2 வயது குழந்தை நிஷாவையும் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வெளியே வீசினர்.

இதில் அந்தக் குழந்தை அந்த இடத்திலேயே பலியானாள்.

இதையடுத்து அந்த 4 பேரும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டனர். இவ்வளது நடந்தபோதும் சக பயணிகள் யாரும் இதில் தலையிடவில்லை என்பது தான் கொடூரத்தின் உச்சம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+