குடும்ப பிரச்சினைகளை தீர்க்க 4 காவல் நிலையங்களில் கவுன்சிலிங்: கமிஷனர் ராஜேந்திரன் அறிவிப்பு
சென்னை: சென்னையில் நான்கு காவல் நிலையங்களில், குடும்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கவுன்சிலிங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
பன்முக கலாச்சாரங்களுக்கு இடையில் குடும்ப உறவு என்ற தலைப்பிலான கருத்தரங்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதில், கமிஷனர் ராஜேந்திரன் கலந்து கொண்டார்.
இந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது,
இன்றைய நவீன யுகத்தில் கூட்டுக் குடும்பங்களைக் காண்பதே அரிதாகி விட்டது. மக்கள் தனிக் குடும்பங்களையே விரும்புகின்றனர். இந்நிலையில் குடும்ப உறவில் ஏற்படும் விரிசல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குடும்பத் தகராறு தொடர்பான புகார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதைத் தீர்த்து வைப்பதற்கே எங்களுக்கு நேரம் சரியாக உள்ளது. குடும்ப பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று கல்லூரி மாணவ- மாணவிகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு கல்லூரிகளில் இது தொடர்பான பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சென்னை நகரில் உள்ள பல போக்குவரத்து சிக்னல்கள் இயங்கவில்லை என புகார்கள் வந்துள்ளன. அவை மழையால் பழுதாகி உள்ளது. அவை உடனே சரி செய்யப்படும்.
அதிகரித்து வரும் குடும்ப பிரச்சினைகளை தீர்க்க சென்னை மாநகரின் 4 காவல் நிலையங்களில் கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்சினை தொடர்பாக பெண்கள் தான் அதிக அளவில் புகார் கொடுக்கின்றனர். அவற்றில் வன்முறை தொடர்பான புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications