5000 இலங்கையருக்கு வேலை தரும் கொரியா!
கொழும்பு: இலங்கையைச் சேர்ந்த 5000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவிருப்பதாக தென் கொரியா அறிவித்துள்ளது.
தென் கொரியாவில் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஏற்கெனவே இலங்கையைச் சேர்ந்த 20000-க்கும் அதிகமானோர் இங்கு வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தென் கொரியாவின் மொத்த வேலைவாய்ப்பில் 37 சதவீதத்தை இலங்கையர்களுக்கு வழங்குவதாக அந்நாட்டு அரசு கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. இலங்கை பணியாளர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாகத் திகழ்வதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தென்கொரியா அறிவித்திருந்தது.
இந்த ஆண்டு மட்டும் 29 ஆயிரத்து 732 இலங்கைப் பணியாளர்கள் கொரியாவில் வேலைகேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
இதற்காக கடந்த 3 நாட்களில், இலங்கை முழுவதிலும் பல மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டன.
கடந்த வருடத்தை விட, இவ்வருடம் அதிகமானோர் கொரியாவில் பணியாற்ற விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கு கொரிய மொழித் தேர்வை வரும் அக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்டுள்ளது.
இந்தத் தேர்விலிருந்து 5000 பேர் தேர்வு செய்யப்பட்டு, கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் ஏப்ரல் மாதம் வரை கொரியாவில் பணியாற்றுவதற்காக இலங்கையிலிருந்து 3 ஆயிரத்து 500 பேர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications