பெங்களூர் கிரிக்கெட் ஸ்டேடிய குண்டுவெடிப்பிலும் மதானிக்குத் தொடர்பு-கர்நாடக அமைச்சர்
பெங்களூர்: பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடிய சுவரில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த அப்துல் நாசர் மதானிக்குத் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மதானியை கர்நாடக போலீஸார் கடும் சிரமப்பட்டு கைது செய்து கொண்டு வந்துள்ளனர். அவரை காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா இன்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தவிர கடந்த ஏப்ரல் 17ம் தேதி சின்னச்சாமி ஸ்டேடியத்திற்கு வெளியே நடந்த இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் மதானிக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
ஏப்ரல் 17ம் தேதி சின்னச்சாமி ஸ்டேடியத்திற்கு உள்பகுதியிலும், சுற்றுச்சுவரிலும் இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்திலும் மதானிக்குத் தொடர்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பு நடந்த சமயத்தில், ஐபிஎல் போட்டி தொடங்கவிருந்தது. ஸ்டேடியத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். இருப்பினும் குண்டுவெடிப்புப் பொருட்படுத்தாமல் போட்டி தொடர்ந்து நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் உயிர்ப்பலி ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications