கணவர் வீட்டார் கொடுமை-கலெக்டர் அலுவலகத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி
சேலம்: கணவர் வீட்டாரின் வரதட்சணைக் கொடுமையைத் தாங்க முடியாத கர்ப்பிணிப் பெண் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் தனது நண்பர் வேலு என்பவரின் தங்கை பிரியதர்ஷினி (23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் போது பிரியதர்ஷினிக்கு 8 பவுன் நகை போட்டுள்ளனர். அந்த நகையை சிவகுமார் வாங்கி அடகு வைத்து விட்டதாக தெரிகிறது. மேலும் சிவகுமார், அவரது தாயார் மாணிக்கம் ஆகியோர் ரூ. 5 லட்சம் வரதட்சணை கேட்டு பிரியதர்ஷினியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
கர்ப்பிணியாக உள்ள பிரியதர்ஷினியால் இதைத் தாங்க முடியவில்லை. இதையடுத்த கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு தனது கணவர் வீட்டாரின் கொடுமையை விவரித்து மனு ஒன்றை அளித்தார். பின்னர் தனது கையில் வைத்திருந்த பத்து தூக்க மாத்திரைகளை எடுத்து வாயில் போட்டு விழுங்கினார்.
சற்று நேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார் பிரியதர்ஷனி. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை போலீஸாரும், பொதுமக்களும் சேர்ந்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கணவர் வீட்டாரின் கொடுமைகள் குறித்து மனு அளித்து விட்டு தற்கொலைக்கு முயன்ற பிரியதர்ஷனிக்கு இன்று கல்யாண நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications