புத்தக வெளியீட்டு விழாவில் மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்
சென்னை: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள். அது போன்று என் வெற்றிக்கு பின்னால் என் மனைவி இருக்கிறார் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
எழுத்தாளர் ராணி மைந்தன் எழுதிய "எம்.பி.நிர்மல்-ஒரு தனி மரத்தோப்பு'' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகரில் நேற்று மாலை நடந்தது. இதற்கு எக்ஸ்னோரா இண்டர்நேஷனலின் தலைவர் சுலோச்சனா ராமசேஷன் வரவேற்புரை அளித்தார்.
இதில் கலந்து கொண்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை நடிகர் விவேக் பெற்றுக் கொண்டார்.
அப்போது துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
கடந்த 1989-ம் ஆண்டு எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் அமைப்பு அடையாறில் தொடங்கப்பட்டது. அப்போது எம்.எல்.ஏ.வாக இருந்த எனக்கு இந்த அமைப்பை தொடங்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த அமைப்பின் மூலமாக தான் நான் பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பையும் பெற்றேன். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார். அது போன்று என் வெற்றிக்கு பின்னால் என் மனைவி இருக்கிறார். நான் என் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஊக்கம் அளித்தவரும் என் மனைவி தான். இந்தப் புத்தகம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்று அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், எழுத்தாளர் சிவசங்கரி, ஷாசன் கெமிக்கல் எஸ்.அபயக்குமார், கே.ரெட்டி, ஆற்காடு இளவரசர் முகமது நவாப் அலி, பின்னணிப் பாடகி வாணி ஜெயராம், மேயர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications