தலைமைத் தகவல் ஆணையர் தேர்வுக் கூட்டம்-ஜெ. வரவில்லை-ஓ.பன்னீர் செல்வமும் ஆப்சென்ட்
சென்னை: முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த தமிழக தலைமை தகவல் ஆணையர் தேர்வு தொடர்பான கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா வரவில்லை. அவருக்குப் பதில் கலந்து கொள்வார் எனக் கூறப்பட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொள்ளவில்லை. மேலும், நேற்றைய கூட்டத்தில் தகவல் ஆணையர் குறித்த தேர்வும் நடைபெறவில்லை.
தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையராக பணியாற்றி வரும் எஸ்.ராமகிருஷ்ணனின் பதவிக்காலம் இந்த மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் விதிகளின்படி முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஒரு மாநில அமைச்சர் ஆகிய 3 பேர் கொண்ட குழு கூடி தேர்வு செய்ய வேண்டும்.
இதனால் முதல்வர் கருணாநிதியும், எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவும் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. ஆனால் ஜெயலலிதா வர மாட்டார், அவருக்குப் பதில் துணைத் தலைவரான ஓ.பன்னீர் செல்வம் போவார் என தகவல்கள் வெளியாகின.
அதேசமயம், விதிப்படி எதிர்க்கட்சித் தலைவர்தான் வந்தாக வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறையில் இக்கூட்டம் நடந்தது. இதில் நிதியமைச்சர் அன்பழகன் பங்கேற்றார். பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத் துறை செயலாளர் கே.என்.வெங்கட்ரமணனும் கலந்து கொண்டார். ஆனால் ஜெயலலிதா வரவில்லை. ஓ.பன்னீர் செல்வமும் வரவில்லை.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கூட்டம் நடந்தது. இருப்பினும் யார் புதிய தகவல் ஆணையர் என்பது அறிவிக்கப்படவில்லை. நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஆளுநருக்குத் தெரிவிக்கப்பட்டு ஒப்புத்ல பெறப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
பணி நீடிப்பில் தலைமைச் செயலாளராக உள்ள கே.எஸ்.ஸ்ரீபதி புதிய தகவல் ஆணையராக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஜெயலலிதா வரலாம் என்ற எதிர்பார்ப்பில் நேற்று தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், டிவி கேமராமேன்கள் என பெரும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால் 'அம்மா' கடைசி வரை வரவே இல்லை.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications