26 டிஎம்சி காவிரி நீர்: தமிழகம் கோரிக்கை-கர்நாடகம் நிராகரிப்பு
டெல்லி: தமிழகம் கோரியபடி காவிரியில் உடனடியாக 26 டி.எம்.சி. நீரைத் தர கர்நாடகம் மறுத்துவிட்டது. இதையடுத்து பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையக் கூட்டத்தை உடனே கூட்டுமாறு தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவுப்படி தமிழகத்துக்கு இந்த ஆண்டு தர வேண்டிய காவிரி நீரை முழுவதுமாக கர்நாடகம் தரவில்லை.
இதையடுத்து இன்று டெல்லி நீர்வள அமைச்சகத்தில் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடந்தது. இதில் தமிழக அரசின் சார்பில் சுப்பிரமணியம், மோகன கிருஷ்ணன், ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில், பயிர்களைக் காக்கவும் குடிநீர் தேவைக்காகவும் உடனடியாக 26 டி.எம்.சி. நீரை காவிரியில் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகத்திடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது.
ஆனால், உடனடியாக நீரைத் திறந்துவிட முடியாது என்றும் மழையைப் பொறுத்தே நீரை வழங்க முடியும் என்றும் கர்நாடகம் தெரிவித்துவிட்டது.
இதை ஏற்க மறுத்துள்ள தமிழக அரசு இது குறி்த்து விவாதிக்க பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையத்தின் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications