சென்னை மாநிலக் கல்லூரி தேர்தல்: மாணவர்கள் அடிதடி-2 பேர் காயம்
சென்னை: சென்னை மாநிலக் கல்லூரி தேர்தல் தொடர்பாக இரு பிரிவு மாணவர்களிடையே நேற்று நள்ளிரவு அடிதடி மோதல் நடந்தது. இதில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று மாணவர் பேரவை தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. தலைவர், உபதலைவர், செயலாளர், மாணவிகளுக்கான செயலாளர் ஆகிய 4 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
இந்தப் பதவிகளுக்கு 12 பேர் போட்டியிட்டனர். இதற்காக நேற்று நள்ளிரவு மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே மாணவர்கள் பேனர் கட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அடிதடியில் உதயகுமார், ரவி ஆகிய மாணவர்கள் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து கல்லூரி முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications