தங்கபாலு போகிற இடமெல்லாம் கருப்புக் கொடி காட்டுவோம்-இளங்கோவன் ஆதரவாளர்கள்
கோவை: காங்கிரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லிய தலைவர்களை புறக்கணிப்பது உண்மையான தலைவர்களின் செயலா? என்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு மிகப் பெரிய சந்தேகமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் தங்கபாலு எந்த கட்சியை சார்ந்தவர்? என்பதை அறிவிக்க வேண்டும். விளக்கம் தரவில்லையென்றால் அவர் போகிற இடமெல்லாம் கருப்புக் கொடி காட்டுவோம் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், இளங்கோவன் ஆதரவாளருமான யுவராஜ் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 43 வருடம் ஆகிறது. இருந்தாலும் காங்கிரசார் தங்களது வாழ்வை தியாகம் செய்து கட்சிக்கு கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
தமிழகத்தில் இளைஞர் காங்கிரசில் 13 லட்சம் இளைஞர்கள் புதிதாக சேர்ந்துள்ளார்கள்.
மத்திய காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த நலத்திட்டங்களை ஏற்று மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியது காங்கிரஸ் கட்சியின் தலைமையின் தலையாய கடமையாகும்.
ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சி இத்தகைய திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்வதில்லை. ஜவகர்லால் நேரு, நகர புனரமைப்பு திட்டத்துக்கு மட்டும் மத்திய அரசு ரூ. 2 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இதை கூட சொல்ல தவறி விட்டார்கள்.
இதை மக்களிடம் எடுத்துச் சொல்லிய ஒரே தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டுமே. இதே போல் பல நலத்திட்ட உதவிகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறார்.
இதற்காக கோவையில் நடைபெறும் சி.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழாவுக்கு அவரை அழைக்காமல் புறக்கணித்து உள்ளனர். புறக்கணித்தது ஏன்? அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? இதே போன்ற நிகழ்வுகள்தான் கடந்த 1980, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு (கட்சி பிளவு) காரணமாக அமைந்தது. தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருந்தால் மீண்டும் அதே போல ஒரு நிகழ்வு ஏற்பட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியே காரணமாக அமைந்து விடும்.
காங்கிரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லிய தலைவர்களை புறக்கணிப்பது உண்மையான தலைவர்களின் செயலா? என்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு மிகப் பெரிய சந்தேகமாக உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் தங்கபாலு எந்த கட்சியை சார்ந்தவர்? என்பதை அறிவிக்க வேண்டும். விளக்கம் தரவில்லையென்றால் அவர் செல்லும் இடம் எல்லாம் கறுப்பு கொடி காட்டுவோம். வருகிற 28-ந் தேதி கோவைக்கு வரும் தங்கபாலுவுக்கு உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக கறுப்பு கொடி காட்டப்படும்.
இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் உடனடியாக தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தங்கபாலுவை நீக்க வேண்டும். இதற்காக அவர்களுக்கு ரத்த கையெழுத்திட்டு கடிதம் அனுப்புவோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications