For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவ அதிகாரிக்கு சீனா விசா மறுப்பு-இந்தியா பதிலடி

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிக்கு சீனா விசா மறுத்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடியாக இரு சீன அதிகாரிகளுக்குத் தரப்பட்ட விசாவை இந்தியா ரத்து செய்துள்ளது.

வடக்கு கமாண்ட் ராணுவ உயர் அதிகாரியான லெப்டினென்ட் ஜெனரல் பி.எஸ்.ஜஸ்வால், சீனா செல்ல விசா கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவர் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வரும் அதிகாரி என்பதைக் காரணம் காட்டி அவருக்கு சீனா விசாமறுத்துள்ளது.

இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகையில், அதிகாரி ஜஸ்வால், ஜம்மு காஷ்மீர் பொறுப்பை வகிப்பதால் அவருக்கு விசா தர மறுத்துள்ளது சீனா. இது ஏற்றுக் கொள்ளமுடியாதது என்று தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரை இந்தியாவின் ஒரு மாநிலமாக சீனா அங்கீகரிக்கவில்லை. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்களுக்கு தனி விசாவைத் தந்து இந்தியாவை தேவையில்லாமல் விஷமத்தனமாக சீண்டி வருகிறது.

சீனாவின் இந்த செயலை தொடர்ந்து இந்தியா கண்டித்து வருகிறது. இந்த நிலையில் ராணுவ உயர் அதிகாரிக்கு சீனா விசா தர மறுத்துள்ளது.

இதையடுத்து இரு சீன அதிகாரிகளுக்குத் தரப்பட்ட விசாவை இந்தியா ரத்து செய்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X