பருப்பு-சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.5 வரை குறைந்தது!
சென்னை: கிடுகிடுவென உயர்ந்து வந்த மளிகைப் பொருள்களின் விலை சற்றே குறையத் துவங்கியுள்ளது.
குறிப்பாக நடுத்தர மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்ந்த பருப்பு விலை உயர்வு ஒரு கட்டுக்குள் வந்துள்ளது. ஒரு கிலோ துவரம் பருப்பு 63 லிருந்து ரூ 58 ஆகக் குறைந்துள்ளது.
சர்க்கரை விலை ரூ 30லிருந்து 26-க்குக் குறைந்துள்ளது.
மகாராஷ்ட்ராவிலிருந்து அதிக அளவு புதிய பருப்பு வரத்து துவங்கியுள்ளதாலும், வட மாநிலங்களில் இந்த முறை கரும்பு விளைச்சல் மற்றும் சர்க்கரை உற்பத்தி சிறப்பாக உள்ளதாலும் இந்த விலைக் குறைவு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பருப்பு, சர்க்கரை விலை மேலும் ரூ 5 முதல் 8 வரை குறைய வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார்கள்.
இந்த இரு பொருள்கள் தவிர, மேலும் சில மளிகைப் பொருள்களின் விலையிலும் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பாசிப்பருப்பு கிலோவுக்கு முதல் ரகம் ரூ.88ல் இருந்து ரூ.78 ஆகவும், 2-ம் ரகம் ரூ.75ல் இருந்து ரூ.65 ஆகவும் குறைந்துள்ளது.
உளுந்தம் பருப்பு கிலோ ரூ.80ல் இருந்து ரூ.76 ஆகவும், 2-ம் ரகம் ரூ.70 இருந்து ரூ.65 ஆகவும் குறைந்துள்ளது.
மிளகாய் வத்தல் கிலோ ரூ.120ல் இருந்து ரூ.80 ஆக குறைந்து விட்டது. 2ம் ரகம் ரூ.100ல் இருந்து ரூ.60 ஆக குறைந்துள்ளது. நீள மிளகாய் வத்தல் ரூ.70ல் இருந்து ரூ.55 ஆகவும் குறைந்துள்ளது.
பாமாயில் கிலோ ரூ.52ல் இருந்து ரூ.47 ஆகவும், கடலை எண்ணை விலை ரூ.85ல் இருந்து ரூ.79 ஆகவும் குறைந்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications