களியக்காவிளை-எஸ்.ஐ, 6 போலீசாரை லாரி ஏற்ற கொல்ல முயற்சி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 6 போலீஸாரை லாரி ஏற்றிக் கொன்று விட்டு தப்ப முயன்றனர் மணற் கொள்ளையர்கள்.
களியக்காவிளை போலீ்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் மரிய அற்புதராஜன் மற்றும் 6 போலீஸ்காரர்கள் களியக்காவிளை சோதனை சாவடியில் நேற்று இரவு வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக 2 லாரிகள் மிக வேகமாக வந்தது. லாரிகளை வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அந்த லாரிகளின் டிரைவர்கள் லாரியை நிறுத்தாமல் வேகமாக வந்து சப்-இன்ஸ்பெக்டர் மரிய அற்புதராஜன் மற்றும் 6 போலீ்ஸ்காரர்களின் மீது மோதுவது போல் வந்தனர்.
உடனே சுதாரித்து கொண்ட அவர்கள் ரோட்டில் விழுந்து விலகி ஓடி உயிர் தப்பினர். பின்பு அந்த லாரிகளை துரத்தி சென்றனர். அப்போது 2 லாரிகளையும் நிறுத்தி விட்டு அதில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
ரோட்டோரம் நிறுத்தப்பட்ட அந்த லாரிகளை போலீசார் கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் மணல் கொண்டு செல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த லாரிகளை மணலுடன் சேர்ந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இரு லாரிகளின் டிரைவர்கள், கிளினர்கள், உரிமையாளர்கள் என மொத்தம் 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications