கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை- நெல்லையில் 3 புரோக்கர்கள் கைது
நெல்லை: கூடுதல் விலைக்கு ரயில் டிக்கெட்களை விற்ற 3 புரோக்கர்களை நெல்லை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ரயிலில் எந்நாளும் பயணிகள் கூட்டம அலைமோதுகிறது. இதனால் இந்த வழிதட ரயில் டிக்கெட்டுகளை சிலர் கூடுதல் விலைக்கு கள்ள தனமாக விற்று வருகின்றனர். டிக்கெட் புரோக்கர்களின் ஆதிக்கத்தால் முன்பதிவு டிக்கெட் மையங்களில் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருப்பவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை.
அதோடு தக்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இடம் பிடிப்பதிலும் கடும் போட்டி நெல்லை, பாளை டிக்கெட் மையங்களில் நிலவுகிறது. இதை தடுக்க நெல்லை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் டிக்கெட் புரோக்கர்கள் சிக்கினாலும் அபராதம் செலுத்தி வி்ட்டு மீண்டும் டிக்கெட் விற்பனையில் களம் இறங்கி விடுகின்றனர். ரம்ஜான் பண்டிகையை ஓட்டி தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்தது.
இதற்கான முன்பதிவு நேற்று காலை துவங்கியது. இதனால் அனைத்து டிக்கெட் முன்பதிவு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை, பாளை முன்பதிவு மையங்களில் நேற்று இரவே சிலர் இடம் பிடித்தனர். வழக்கம்போல் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அவினேஷ் குமார், அன்சாரி மற்றும் ஏட்டு சார்லஸ் ஆகியோர் சோதனை நடத்தினர்.
அப்போது நெல்லை சந்தி்ப்பை சேர்ந்த கொமபையா, கொக்கிரகுளத்தை சேர்ந்த கிறிஸ்டோபர், கொங்கன்நாதன்துறையை சேர்ந்த முகமது காசிம் ஆகியோர் கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகளை கள்ள மார்க்கெட்டில் விற்பது தெரிய வந்தது.
அவர்களை போலீசார் கைது செய்து வரும் வரும் 29ம் தேதி நெல்லை எக்ஸ்பிரசி்ல் சென்னை செல்ல கூடிய டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications