விமான நிலையத்தில் விசா வழக்கும் முறை: ரத்து செய்கிறது இலங்கை
கொழும்பு: இந்தியர்கள் உள்ளிட்ட 70 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு, விமான நிலையத்தில் விசா வழக்கும் வசதியை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து இலங்கை குடியேற்றத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கைக்கு வரும் வெளிநாட்டினருக்கு விமான நிலையத்திலேயே விசா வழங்கும் வசதி நிறுத்தப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி முதல் இந்த வசதி நிறுத்தப்படும்.
அதே நேரத்தில் சிங்கப்பூர் மற்றும் மாலத் தீவுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு மட்டுமே இனி இந்த வசதி தொடரும். அவர்களுக்கு மட்டுமே விமான நிலையத்திலேயே விசா வழங்கப்படும்.
இந்தியர்கள் உள்ளிட்ட 70 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு இந்த வசதி இனி வழங்கப்படமாட்டாது.
அவர்கள் தங்கள் நாட்டில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலமோ அல்லது இலங்கை குடியேற்றத்துறையிடமோ விண்ணப்பித்து விசா பெற்றுத் தான் இலங்கைக்குள் வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே, 30 நாட்களுக்கு விசா வழங்கும் திட்டம், கடந்த 1970ம் ஆண்டு முதல் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து மட்டும் 83,500 பேர் இலங்கைக்கு சுற்றுலா சென்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications