ரயில், பஸ் பயணத்திற்கு ஒரே பாஸ் அறிமுகப்படுத்த அரசு திட்டம்
சென்னை: பஸ் பயணம் மற்றும் ரயில் பயணத்திற்கு தனித் தனி பாஸ் வசதி இருப்பதற்குப் பதில் ஒரே பாஸை பயன்படுத்தும் வகையிலான திட்டம் குறித்து அரசு யோசித்து வருகிறது.
சென்னை நகரில் பஸ் பயணத்தைவிட ரயில் பயணம் மிகப் பிரபலமானது. காரணம், பஸ் சேவையை விட ரயில் சேவை மிகவும் வசதியாகவும், எளிதாகவும் இருப்பதால். இரண்டுமே சென்னை நகரின் முக்கிய போக்குவரத்து சேவையாக திகழ்கிறது.
மாநகர பேருந்துகளிலும், மின்சார ரயில்களிலும் பாஸ் வசதிகள் உள்ளன. இவற்றை தற்போது ஒன்றாக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
பஸ், மின்சார ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றிக்கு ஒரே பொதுவான பாஸ் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மசோதா வருகிற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது.
இதற்காக சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்,
பஸ் போக்குவரத்து, மின்சார ரயில் போக்குவரத்து, பறக்கும் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை என தனித்தனியாக செயல்படுகிறது. தனித்தனியாக இருப்பதால் இவற்றில் உள்ள சில வேலைகள் தாமதப்படுகின்றன. ஒரே அங்கீகாரம் அதிகாரத்தின் கீழ் இவற்றை கொண்டு வந்தால் எந்த பணியையும் விரைவாக செயல்படுத்த முடியும்.
அதற்காக சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் என்ற அமைப்பு தொடங்கப்படுகிறது.
இந்த அமைப்பை தொடங்க வரும் மழைக்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாவிற்கு வீட்டு வசதி, நிதித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ. உயர் அதிகாரிகள் இறுதி வடிவம் கொடுக்கிறார்கள். இந்த அமைப்பிற்கு என்னென்ன அதிகாரம் கொடுப்பது என்றும் ஆலோசிக்கப்படுகிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications