பற்றி எரிந்த நானோ கார்... 6 மாதங்களில் மூன்றாவது பயங்கரம்!

டெல்லியில் வெள்ளிக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் நானோ வாடிக்கையாளர்களை மிரள வைத்துள்ளது என்றால் மிகையல்ல!
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுபவர் ரவீந்திர நாராயணன். கடந்த மே மாதம் இவர் டாடா நானோ கார் வாங்கினார். 38000 கிமீ ஓடியுள்ள இந்தக் காரை ஒருமுறை கம்பெனி சர்வீஸ் பண்ணியுள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று நாராயணனின் ஓட்டுநரும் மேலாளரும் அந்தக் காரில் கன்னாட் பிளேஸிலிருந்து ஹோஸ் காஸுக்கு வந்துள்ளனர். பின்னர் அரபிந்தோ மார்க்கில் அந்தக் காரை நிறுத்தியுள்ளனர். அப்போது காருக்குள் நாராயணனின் மேலாளர் உட்கார்ந்திருந்தார். சரியாக 11.30க்கு கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதை உணர்ந்த மேலாளர் சட்டென்று கதவைத் திறந்து வெளியேறியுள்ளார்.
முதலில் பின்பக்கமிருந்துதான் புகை வந்துள்ளது. அதைப் பார்த்து ஓட்டுநர் பாட்ரிக் வருவதற்குள் வேகமாகப் பரவி இரண்டே நிமிடங்களில் மொத்த காரும் பஸ்பமாகிவிட்டது.
ஏற்கெனவே வதோத்ரா மற்றும் மும்பையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரு நானோ கார்கள் தீப்பிடித்து எரிந்தன. 6 மாதங்களில் நடந்துள்ள மூன்றாவது நானோ தீ விபத்து இது.
மூன்று மாதங்களுக்கு முன்புதான் டாடா நானோ மிகவும் பாதுகாப்பானது என்று டாடா மோட்டார்ஸ் சான்றிதழ் வழங்கியது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications