ஷேர் ஆட்டோக்கள் மோதி தீப்பிடித்ததில் 4 பேர் பரிதாப சாவு
மதுரை: மதுரை அருகே ஷேர் ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில், அவை இரண்டும் தீப்பிடித்துக் கொண்டன. இதில் அதில் பயணம் செய்த நான்கு பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ளது நரியம்பட்டி. இவ்வூரை சேர்ந்த முருகன் மகன் பாண்டியராஜன் (18). இவர் அதே ஊரை சேர்ந்த காசிமாயன் என்பவரின் ஷேர் ஆட்டோவில் டிரைவராக பணிபுரிந்தார்.
இந்த ஆட்டோ செக்கானூரணி-விக்கிரமங்கலம் இடையே ஷேர் ஆட்டோவாக இயக்கப்பட்டு வந்தது. நேற்று பாண்டியராஜன் தனது ஆட்டோவில் செக்கானூரணியில் இருந்து நரியம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர் திசையில் விக்கிரமங்கலத்தில் இருந்து ராமன் என்பவர் மற்றொரு ஷேர் ஆட்டோவை ஓட்டி வந்தார். கண்ணனூர் விலக்கு அருகே வந்தபோது பாண்டியராஜன் ஆட்டோவும், ராமன் ஓட்டி வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் ராமன் ஓட்டிவந்த ஆட்டோ மோதிய வேகத்தில் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அதே நேரத்தில் பாண்டியராஜன் ஓட்டிவந்த ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது.
இதில் பாண்டியராஜன் மற்றும் பயணம் செய்த 3 பேர் அதே இடத்தில் உடல் கருகி பலியானார்கள்.
தகவல் கிடைத்ததும் திருமங்கலம் தீயணைப்பு நிலைய அதிகாரி கதிரேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து பிணங்களை மீட்டனர்.
பாண்டியராஜனுடன் உயிரிழந்த மற்ற மூவரும் யார் என்பது தெரியவில்லை. அவர்களது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப் போய் காணப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications