புதுவையில் திமுக-காங். கூட்டணி சுமூகமாக உள்ளது: அமைச்சர் நாராயணசாமி
சென்னை: புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி சுமூகமாக உள்ளதாக கூறியுள்ளார் மத்திய அமைச்சரும், புதுவை காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமி.
முதல்வர் கருணாநிதியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் நாராயணசாமி. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள அகழிகளை அகற்றுவதற்கும், அதனை செப்பனிடுவதற்கும், பஸ் நிலையம் மற்றும் பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக நானும், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கமும் ஆய்வு செய்தோம்.
இந்த பணிகளுக்காக மத்திய அரசு ரூ.28 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. என்ன என்ன பணிகள் நடைபெற்றுள்ளன என்பது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் எடுத்துக் கூறினேன்.
இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ஏற்கனவே ரூ.1,000 கோடி வழங்கியுள்ளது. மேலும் அங்கு உள்ள தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டிகொடுக்க உள்ளது. ரூ.1,500 கோடியை வட்டியில்லா கடனாக வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு உறுதுணையாக இருந்ததற்காக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தேன். அதேபோல இலங்கை தமிழர் நல்வாழ்வுக்காக பிரதமர் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதை எடுத்துக்கூறினேன்.
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி சுமூகமாகவும், வலுவாகவும் உள்ளது. இந்த கூட்டணி வரும் காலத்திலும் தொடரும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா டெல்லி மேல்-சபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்போது, சில கட்சிகள் உள்ஒதுக்கீடு வலியுறுத்துவதால் தற்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிலுவையில் உள்ளது.
வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிச்சயமாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும். இதேபோல உணவு பாதுகாப்பு சட்டம் தொடர்பான மசோதாவும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications