டாஸ்மாக் கடைகளில் 39 புதிய மது பானங்களை விற்க அரசு ஒப்புதல்
சென்னை: தமிழகத்தில் அரசே நடத்தி வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மேலும் 39 வகை மதுபானங்களை விற்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மது விற்பனையே அரசே ஏற்று குடிகாரர்களுக்கு மது விற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் இதற்காக சுமார் 6700 டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டு மது விற்று வருகிறார்கள். மதுபான விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிது. டாஸ்மாக் கடைகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் வரும் வருமானம் தமிழக அரசுக்கு மிக முக்கிய வருமானமாக உள்ளது. தற்போது மதுவின் மூலம் வரும் இந்த பிரமாண்ட வருமானத்தை மேலும் பல மடங்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது இங்கு ரம், விஸ்கி, பிராண்டி ஆகியவை விற்கப்படுகின்றன. இவை பல பிராண்டுகளை உள்ளடக்கியவையாகும். தற்போது மேலும் 39 வகை மதுபானங்களை விற்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாம்.
இந்த மது பான வகைகளை தயாரிக்கும் உரிமை, மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரிஸ், சதர்ன் அக்ரி பியூரன் இன்டஸ்டிரிஸ், எம்.பி.டி. டிஸ்டில்சிரிஸ், எஸ்.என்.ஜே. டிஸ்டில்லரிஸ், மோகன் ப்ரூவரிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications