திருத்தணியில் இடிதாக்கி கோவில் கோபுரம் சேதம்: கனமழையால் மக்கள் அவதி
திருத்தணி: திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் தும்பிகுளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலின் கோபுரம் இடி விழுந்து சேதமடைந்தது.
திருத்தணியை அடுத்து உள்ளது தும்பிக்குளம் கிரமாம். இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. அப்போது இடி தாக்கி அங்கிருக்கும் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலின் கோபுரம் சேதமடைந்தது. இந்த இடியால் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் பழுதானது. மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் கிராமமே இருளில் மூழ்கியது. இடிதாக்கி ஒரு பசுமாடு இறந்தது.
திங்கள்கிழமை காலை கோவில் பூசாரி கோவிலைத் திறந்தபோது கோபுரத்தில் இருந்த பஞ்சலோக கலசம் கீழே விழுந்து நொறுங்கிக் கிடந்தது. மேலும் கோவிலின் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி வருவாய் ஆய்வாளர் திவாகர், வி.ஏ.ஓ. சந்திரன், ஊராட்சி துணைத் தலைவர் முனுசாமி, கோவில் நிர்வாகிகள் கோபி, ரமேஷ், மூர்த்தி, கொல்லாபுரி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
திருத்தணியில் பெய்த கன மழையால் அரக்கோணம் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பழைய தர்மராஜாகோவில் தெருவில் மழைநீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகுந்தது.
இந்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications