ஐபிஎல் ஊழல் மூலம் கிடைத்த பணத்தில் விமானம் வாங்கிய லலித் மோடி

ஐபிஎல் அமைப்பில் நடந்த ஊழல்கள் எதிரொலியாக அதன் ஆணையர் பதவியிலருந்து தூக்கப்பட்டார் மோடி. அவர் மீது இந்திய கிரிக்கெட் ஆணையம் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது. ஆனால் விசாரணைக்கு வராமல் டிமிக்கி அடித்துக் கொண்டிருக்கிறார் மோடி. தனது வக்கீலை மட்டும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
தற்போது வெளிநாட்டில் போய் உட்கார்ந்து கொணடிருக்கும் மோடி, மும்பை தாதாக்களால் தனக்கு ஆபத்து இருப்பதாக கூறி வர மறுத்து வருகிறார். தற்போது மோடி மீது கிரிமினல் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்ய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப டிவி உரிமை வழங்கப்பட்டதில் பெரும் அளவில் ஊழல் நடந்துள்ளது. இதில் கிடைத்த பணத்தை வைத்து மோடி பெரிய விமானமே வாங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
வோர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குழுமம்தான் இதற்கான டிவி உரிமையை வாங்கியது. 10 ஆண்டுகளுக்கான உரிமம் இது. இதில் ரூ. 425 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதில் ரூ. 80 கோடிக்கு மோடி விமானம் வாங்கியுள்ளாராம். வருமான வரித்துறை நடத்திய விசாரணையில் இது தெரிய வந்துள்ளது.
விரைவில் மோடி மீது பல்வேறு கிரிமனல் வழக்குகள் சரமாரியாக பாயும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மறுபடியும் கிரிக்கெட் ஊழல் சூடு பிடித்துள்ளது.
-
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications