கர்நாடகாவில் தற்கொலைக்கு அனுமதி கேட்ட 70 வயது பெண்: மருத்துவ பரிசோதனை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கரிபசம்மா (70). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர், தான் தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்குமாறு கோரி பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது கரிபசம்மா கூறியுள்ளதாவது...
முதுமை பருவத்தில் இருக்கும் என்னை ஆதரிக்கவோ, அன்பு செலுத்தவோ வாரிசும் இல்லை உறவுகளும் இல்லை. என் இடுப்பில் உள்ள டிஸ்க் பகுதி விலகியிருப்பதால் ஏற்படும் வலியைத் தாங்க முடியாமல் அவதிப்படுகிறேன். இதுமட்டுமின்றி மூட்டு வலியும் உள்ளது. மேலும், நான் ஒரு நீரிழிவு நோயாளி.
இதனால் ஒவ்வொரு நாளும் நரக வேதனை அனுபவிக்கிறேன். இந்த வேதனையை தாங்க முடியாத நான் ஒரேடியாக இறந்துவிட முடிவு செய்துள்ளேன். நான் மரணத்தை மகிழச்சியுடன் வரவேற்கிறேன். எனவே நான் இறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
தற்கொலை செய்வது சட்டப்படி குற்றம் என்று எனக்குத் தெரியும். நான் சட்டத்தை மதிப்பவள். எனவே நான் இறப்பதற்கு சட்டப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும். விஷ ஊசி போட்டால் உயிரை விடத் தயாராக உள்ளேன்.
நான் வாழ விரும்பவில்லை. எனக்கு உதவ பலர் முன்வருகின்றனர். யார் உதவினாலும் என் வலியை நான் தான் தாங்கியாக வேண்டும். அது என்னால் முடியவில்லை. எனவே, நான் இறப்பதற்கு அனுமதி அளியுங்கள் என்று அவர் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி நோயை குணப்படுத்த முடியுமா? என்று மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஏற்கனவே, கரிபசம்மா இறப்பதற்கு அனுமதி கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதற்கு எந்த பதிலும் வராததால் உயர் நீதிமன்றத்தை அனுகியுள்ளார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications