அதிமுக ஆட்சியில் தொழிற்துறையில் தமிழகம் தன்னிறைவு: ஓ.பன்னீர்செல்வம்

தென்காசியை அடுத்த குற்றாலத்தில் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலச் சட்ட பயிற்சி முகாம் அதன் தலைவர் சின்னசாமி தலைமையில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-ம் நாளான நேற்று இப்பயிற்சி முகாமில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பசாமி, ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டியன், சாட்டையடி சக்திவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகம் தொழில்துறையில் முன்னிலை வகித்தது. இந்தியாவில் தொழில் துறையில் தன்னிறைவைப் பெற்ற முதல் மாநிலமாகவும் இருந்தது.
காரணம் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இருந்த 7600 மெகா வாட் மின்சார உற்பத்தியை 10000 ஆக உயர்த்திக் காட்டியது ஜெயலலிதா ஆட்சியில் தான். ஆனால் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது ஏராளமான பின்னலாடை ஆலைகள், நூற்பாலைகள், ஆயத்த ஆடைகள் ஆலைகள் மின்வெட்டு காரணமாக மூடப்பட்டு பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி விலைவாசி உயர்வு தி.மு.க. ஆட்சியில் விண்ணைத் தொட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications