மலேசியாவில் கர்ப்பிணிகளாகும் மாணவிகளுக்கு சிறப்பு பள்ளி

Subscribe to Oneindia Tamil

Pregnant Teenager
கோலாலம்பூர்: பள்ளிகளில் பலவிதம் உண்டு. ஆனால் மலேசியாவில் திறக்கப்பட்டுள்ள இந்த பள்ளி புது விதம். பள்ளிப் பருவத்தில் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாகும் பெண்களுக்காக மலேசியாவில் இந்தத் தனி பள்ளி ஒன்று திறக்கப்படவுள்ளது.

மலேசியாவின் தி ஸ்டார் நாளிதழில் இது தொடர்பாக மலாக்கா அதிகாரிகள் தெரிவித்ததாக வெளிவந்துள்ள செய்தி..

மலேசியாவில் பள்ளியில் படிக்கும் பொழுதே திருமணம் ஆகாமல் கர்ப்பமாகும் டீன் ஏஜ் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அவ்வாறு கருவுறும் மாணவிகள் பொது பள்ளிகளில் படிக்க சிரமப்படுகின்றனர்.

எனவே, அவர்கள் வசதிக்காக வரும் 16-ம் தேதி கர்ப்பிணி மாணவிகளுக்கான சிறப்பு பள்ளி திறக்கப்படவுள்ளது. மலாக்கா மாநில இஸ்லாமிய விவகாரத் துறை இந்த பள்ளியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும்.

இங்கு மற்ற பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்கள் தவிர்த்து மத ஆலோசனை கூடுதலாக அளிக்கப்படும். கர்ப்பிணி மாணவிகளின் வசதிக்காக பள்ளி்க்கு அருகில் விடுதியும் கட்டப்பட்டுள்ளது. மலாக்கா மாநிலத்தில் சுமார் 170 இளம் பெண்கள் திருமணப் பந்தமின்றி கருவுற்று குழந்தை பெற்றுக்கொண்டுள்ளனர். இவ்வாறு பள்ளியில் படிக்கும் போதே திருமணம் ஆகாமல் தாயாகும் பெண்களால் மலேசியாவிற்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+