விமானப்படையின் கெளரவ கேப்டனாக சச்சின் நியமனம்

சமீப காலமாக திரையுலகப் பிரபலங்கள், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு ராணுவத்தில் கெளரவ கேப்டன், லெப்டினென்ட், கர்னல் ஆகிய அந்தஸ்துகள் தருவது அதிகரித்து வருகிறது. கடந்த காலத்தில் கபில் தேவ், நடிகர் மோகன்லால் ஆகியோருக்கு அப்படிப்பட்ட அந்தஸ்து தரப்பட்டது.
இந்த நிலையில் விமானப்படையின் கெளரவ கேப்டன் என்ற அந்தஸ்து சச்சினுக்குத் தரப்பட்டுள்ளது. விமானப்படையின் கெளரவ கேப்டன் அந்தஸ்தைப் பெறும் முதல் விளையாட்டு வீரர் சச்சின்தான்.
இதற்கான விழா டெல்லியில் உள்ள விமானப்படை ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது. இதில் இந்திய விமானப் படையின் தலைமை தளபதி பி.வி.நாயக் கலந்து கொண்டு டெண்டுல்கருக்கு கவுரவ குரூப் கேப்டன் அந்தஸ்தை அளித்தார்.
37 வயதான டெண்டுல்கர் பத்மவிபூசன், பத்மஸ்ரீ, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, விஸ்டன் கிரிக்கெட் விருது, அர்ஜுனா உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வாங்கி குவித்து வைத்துள்ளார். இந்த நிலையில், தற்போது விமானப்படையின் கெளரவ கேப்டன் பொறுப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது.
மேலும் விமானப்படையின் பிராண்ட் அம்பாசடராகவும் சச்சின் செயல்படுவாராம். விரைவில் போர் விமானத்திலும் அவர் பறக்கவிருப்பதாக தெரிகிறது.
நிகழ்ச்சியில் சச்சின் பேசுகையில், விமானப்படை எனக்கு அளித்த இந்த கவுரவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய விமானப்படையில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்திய விமானப்படையில் சேர வேண்டும் என்ற எனது சிறு வயது கனவு தற்போது நனவாகி விட்டது.
இளைஞர்கள் விமானப்படையில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கனவு காணுங்கள். கனவு ஒருநாள் மெய்ப்படும்.' என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications