ஆன்லைனுக்கு மாறும் வேலைவாய்ப்பகங்கள்-63 லட்சம் பேரின் விபரம் கம்ப்யூட்டரில் பதிவாகிறது
நெல்லை: தமிழத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் உள்ளிட்டவை கம்ப்யூட்டர்மயமாகின்றன. இதையடுத்து 63 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யவுள்ளன்.
தமிழகத்தில் 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், சென்னையில் ஊனமுற்றோருக்கான வேலை வாய்ப்பு அலுவலகம், தொழிற்கல்விக்கான வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை, மதுரையில் தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகம் ஆகிய 36 வேலைவாய்ப்பு அலுவலகங்கள் உள்ளன.
10ம் வகுப்பு, பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியானவுடனும், ஆசிரியர் பட்டயபடிப்பு, பட்டப்படிப்பு முடிப்பவர்கள் உள்ளிட்டோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவும், ஏற்கனவே பதிவு செய்தவர்கள் புதுபிக்கவும வருவதால், எப்போதும அலுவலகத்தில் கூட்டம் நிரம்பு வழிகிறது.
இந்த வேலை வாய்ப்பு அலுவலகங்களில் மொத்தம் 63 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதை தவிர்க்க வேலை வாய்ப்பு அலுவலகங்களை ஆன்லைன் மயமாக்கும் பணியை தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தொடங்கியுள்ளது. இதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு கம்யூட்டர், மோடம், போன், மற்றும் இணைய தள இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்துள்ள 63 லட்சம் பேரின் விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்து சரி பார்க்கும் பணி தொடங்கியது. இந்த பணிகள் அனைத்தையும் முடித்து வரும் 15ம் தேதி ஆன் லைன் முறையி்ல் பதிவு செய்யும் முறையை துவக்கி வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் வீட்டிலிருந்தபடியே வேலை வாய்ப்பு அலுவலக பதிவு, புதுப்பித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications