சம்பளம் இல்லாமல் லிபியாவில் தவிக்கும் 80 தமிழர்கள்-மீட்கக் கோரிக்கை
சென்னை: லிபியாவில் கட்டுமான வேலைக்காக சென்று முறையாக சம்பளம் தரப்படாமல் கடும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர் தமிழகத்தைச் சேர்ந்த 80 தொழிலாளர்கள். இவர்களை மீட்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட ஆப்பிரிக்க நாடான லிபியாவுக்கு கட்டடப் பணிக்காக 2009 டிசம்பரில் தமிழகத்தைச் சேர்ந்த சில பொறியாளர்கள் உள்பட 86 பேர் சென்றுள்ளனர்.
நல்ல வேலை, அதிக ஊதியம் கிடைக்கும் என்று கூறியதன் அடிப்படையில் சென்னை மற்றும் மதுரையைச் சேர்ந்த இரண்டு ஏஜென்சிகள் மூலம் அவர்கள் லிபியா சென்றனர்.
ஆனால் அவர்களுக்கு சொன்னபடி சம்பளம் தரவில்லை. சரியான சாப்பாடும் கிடைக்கவில்லை. அதேசமயம் கடுமையாக வேலை வாங்கப்படுகின்றனர். சொல் பேச்சு கேட்காதவர்களை சித்திரவதை செய்வதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர்களில் 6 பேருக்கு, அவர்களது குடும்பத்தினர் விமான டிக்கெட்டை அனுப்பி வைத்து தமிழகத்திற்கு வரவழைத்து மீட்டுள்ளனர். ஆனால் மற்ற 80 பேரும் லிபியாவிலேயே சிக்கித் தவித்து வருகின்றனர்.
அவர்கள் ஷபா என்ற ஊரில் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனராம். இவர்களில் 10 பேரின் குடும்பத்தினர் சென்னையில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கான அமைச்சரவை அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
மத்திய அரசு தலையிட்டு 80 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications