சென்னையில் விடுதலை சிறுத்தை பிரமுகர் வெட்டிக் கொலை
சென்னை: சென்னை கொடுங்கையூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த கிருஷ்டா என்ற கிருஷ்ணன் என்ன கலைஅழகன் (32) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கல்வி-பொருளாதார விழிப்புணர்ச்சி இயக்கத்தின் வடசென்னை மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வந்தார்.
இவருக்கு சங்கீதா, மாலா ஆகிய 2 மனைவிகள் உள்ளனர்.
எருக்கஞ்சேரி சூல்புனல் கரையில் உள்ள மாலாவின் வீட்டில் நேற்றிரவு கிருஷ்டா இருந்தார். நள்ளிரவு 11.30 மணியளவில் அங்கு வந்த 8 பேர் கதவைத் தட்டினர்.
வெளியே வந்த கிருஷ்டாவை அந்தக் கும்பல் விரட்டிச் சென்றனர். ஒரு சிறிய சந்துக்குள் வைத்து மனைவி, மகன் கண் எதிரிலேயே கிருஷ்டாவை அந்தக் கும்பல் வெட்டியது. இதில் முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுப்பட்ட கிருஷ்டா அங்கேயே பலியானார்.
கிருஷ்டாவின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துவிட்டது. இதையடுத்து கொலையாளிகள் தப்பியோடிவிட்டனர்.
கிருஷ்டா அந்தப் பகுதியில் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வியாசர்பாடியை சேர்ந்த தொழிலதிபர் பாட்ஷா தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கதிலும், எம்.கே.பி. நகரை சேர்ந்த பெயிண்டர் சுரேஷ் மற்றும் வியாசர்பாடி பெண் சாமியார் நாகபூஷணம் ஆகியோர் கொலை வழக்கிலும் கிருஷ்டா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மீது மேலும் சில அடிதடி வழக்குகளும் உள்ளன.
இதனால் முன் விரோதம் காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. கொலையையடுத்து அந்தப் பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications