தனித்தோ, கூட்டணி அமைத்தோ நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவோம்-சரத்குமார்
மதுரை: சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக மற்ற கட்சிகளைப் போல் பேரத்தில் ஈடுபடாமல் சமத்துவ மக்கள் கட்சி கொள்கை அளவில் தான் கூட்டணி அமைக்கும். எங்களுடன் எக்கட்சியும் கூட்டணி குறித்து பேசவில்லை. தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ நிச்சயம் வருகிற தேர்தலில் பேட்டியிடுவது உறுதி என்று கூறியுள்ளார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
அத்தனை கட்சிகளும் கூட்டணி குறித்து தீவிரமாக சிந்தித்துக் கொண்டும், பேசிக் கொண்டும், மிரட்டிக் கொண்டும் உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்பதை முதலில் தெளிவுபடுத்தியுள்ளார் சரத்குமார்.
இதுகுறித்து அவர் மதுரையில்,செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 4-ம் ஆண்டு விழாவும், பொதுக்கூட்டமும் வருகிற 18-ந் தேதி தூத்துக்குடியில் நடக்கிறது. அதற்காக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
4-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சமத்துவ மக்கள் கட்சி வலுப்பெற அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம். முக்கியமாக 234 தொகுதிகளிலும் மக்களுக்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், அவர்களின் தேவைகள் என்ன என்பது பற்றியும் ஒவ்வொரு வீடாக சென்று கருத்துக்கள் கேட்கப்படும்.
இதற்கான தீர்மானங்கள் தூத்துக்குடி கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்படும். மேலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்படும்.
சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக மற்ற கட்சிகளைப் போல் பேரத்தில் ஈடுபடாமல் சமத்துவ மக்கள் கட்சி கொள்கை அளவில் தான் கூட்டணி அமைக்கும். எங்களுடன் எக்கட்சியும் கூட்டணி குறித்து பேசவில்லை. தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ வருகிற தேர்லில் பேட்டியிடுவது உறுதி என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications