வேண்டுமென்றே யாரோ கடிதம் எழுதியுள்ளனர்-ஜெ.வுக்கு மிரட்டல் குறித்து கமிஷனர் கருத்து
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் கடிதத்தை, பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் யாரோ வேண்டும் என்றே எழுதியிருப்பதாக தெரிகிறது என சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்து ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு கடிதங்கள் வந்துள்ளன.
இதுதொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் கிண்டி காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மிரட்டல் கடிதம் எழுதிய நபரை கண்டுபிடிப்பதற்காக தீவிரமாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த விசாரணையில், சர்ச்சையை கிளப்புவதற்காக யாரோ வேண்டுமென்றே இதுபோன்ற கடிதங்களை எழுதுவதாகத் தெரிகிறது.
சம்பந்தப்பட்ட நபர்களைப் பிடிக்க முழு வீச்சில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு இசட் பிளஸ் மற்றும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 6 மெய்காப்பாளர்கள் (1 ஆய்வாளர், 1 காவலர் - ஒரு சமயத்தில் இருவர்), அவருடைய இல்லம் மற்றும் அலுவலகத்தில் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு (2 தலைமை காவலர்கள், 12 காவலர்கள்), வெடிபொருட்கள் பாதுகாப்பு சோதனைக்கு 3 உதவி ஆய்வாளர்கள், 3 காவலர்கள் மற்றும் 3 பெண் காவலர்கள், அதிவிரைவு படையைச் சேர்ந்த 8 காவலர்கள், இரண்டு வழிக்காவல் பாதுகாப்பு 6 உதவி ஆய்வாளர்கள், 18 காவலர்கள், சுற்றுப்புற பாதுகாப்பில் 3 உதவி ஆய்வாளர்கள், 6 காவலர்கள், மற்றும் பகலில் இரண்டு கண்காணிப்பாளர்களும் இரவில் ஒரு கண்காணிப்பாளரும் பாதுகாப்பு அலுவல் புரிகின்றனர்.
ஆக மொத்தம் 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 3 ஆய்வாளர்கள், 12 உதவி ஆய்வாளர்கள், 58 காவலர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பின்படி வழிக்காவலின் போது முன்னும் பின்னும் 6 என்.எஸ்.ஜி. காவலர்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர். அவருக்கு இதேபோன்ற காவல் பாதுகாப்பு போயஸ் கார்டன், சிறுதாவூர் மற்றும் கொடநாடு ஆகிய தங்கும் இடங்களிலும், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருக்கென்று தனி பாதுகாப்பும், பொதுக்கூட்டங்களுக்கு தனி பாதுகாப்புமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேக பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications