கிருஷ்ணகிரியில் முகாமிட்டிருக்கும் 20 பேர் கொண்ட பீகார் கொள்ளைக் கும்பல்: 4 பேர் சிக்கினர்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பீகாரைச் சேர்ந்த ஒரு கொள்ளைக் கூட்ட கும்பலே முகாமிட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை தாலுக்காவில் பீகாரைச் சேர்ந்த 20 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் முகாம் இட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஊத்தங்கரை, போச்சம்பள்ளி தாலுக்காக்களில் கடந்த சில மாதங்களில் மட்டும் ஏராளமான வழிப்பறிச் சம்பவங்கள் நடந்துள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற பயப்படுகின்றனர். கடந்த வாரம் தெருவில் நடந்துவந்த ஆசிரியர் ஒருவரி்ன் தங்கச் செயின் பறிபோனது.
இத்தனை நடந்தும் கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் முயற்சி மேற்கொள்ளவில்லை.
இதற்கிடையே வேலூர் மாவட்டத்திலும் வழிப்பறி நடந்துள்ளது. உடனே ஜோலார்பேட்டை காவலர்கள் கொள்ளையர்களை சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் பீகார் மாநிலத்தில் இருந்து வந்து ஊத்தங்கரையில் தங்கியிருப்பது தெரியவந்தது.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இன்று காலை ஊத்தங்கரை சென்ற போலீசார் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான இருவரை கைது செய்தனர்.
20 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலில் 4 பேர் மட்டுமே சிக்கியுள்ளனர். மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications