பெட்ரோல் விலை மீண்டும் லிட்டருக்கு ரூ. 1.10 உயரலாம்!

பெட்ரோல், டீசல் விலை மீது இருந்த விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்டது. இப்போது சர்வேதச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கூட்டிக் குறைத்து விற்று வருகின்றன.
இந் நிலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அதிக கமிஷன் கோருவதால், அதனால் ஏற்படும் கூடுதல் செலவையும் பொது மக்கள் தலையிலேயே கட்டிவிட எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரவுள்ளது.
இந்தியா முழுவதும் 38,700 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வரும் இந்த பங்க்குகளுக்கு விற்பனை விலையில் ஒரு பகுதியை எண்ணெய் நிறுவனங்கள் கமிஷனான வழங்குகின்றன.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.08ம், ஒரு லிட்டர் டீசலுக்கு 67 பைசாவும் கமிஷனாக வழங்கப்படுகிறது. இந்தக் கமிஷன் போதாது என்று பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
பங்க் பராமரிப்பு செலவு, ஊழியர்களுக்கான சம்பளம், மின் கட்டணம் போன்றவை அதிகமாகிவிட்டதால் 5 சதவீதம் கமிஷன் தொகையாக வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர்.
இதை ஏற்காவிட்டால் வரும் 20ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்றால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவை, தாங்கள் ஏற்காமல் அதை பொது மக்கள் மீதே சுமத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஒருமுறை உயர்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
பங்க் உரிமையாளர்கள் கேட்பது போல 5 சதவீதம் கமிஷன் தரப்பட்டால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.10ம், டீசல் விலை லிட்டருக்கு 60 பைசாவும் உயரும் என்று கூறப்படுகிறது.
இதனால் கமிஷனை கொஞ்சம் மட்டும் உயர்த்தி விலையையும் கொஞ்சமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
சமையல் கேயாஸ் விற்பனை செய்யும் டீலர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் 8 சதவீதம் கமிஷன் தருகினறன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications