கேரளாவில் சிறுநீரகம் திருடப்பட்டதாக வாலிபர் புகார்-இரண்டும் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்!
கோவை: கேரளாவில் வேலைக்குப் போன இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளரிடம் சிறுநீரகம் திருடப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து அவருக்கு சோதனை நடத்தப்பட்டது. அப்போது இரு சிறுநீரகங்களும் இருப்பதாக தெரிய வந்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டுக்கு நேற்று காலை ஒரு வாலிபர் கண்ணீருடன் வந்தார். நெல்லை மாவட்டம் தென்காசிக்கு எப்படி செல்ல வேண்டும்? என்று ஆட்டோ டிரைவர்களிடம் கேட்டார். அந்த வாலிபர் கண்ணீருடன் நிற்பதை பார்த்து, ஆட்டோ டிரைவர்கள் அவரிடம் விசாரித்தனர்.
அப்போது அந்த வாலிபர் தனது பெயர் சுடலை என்றும், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள சிப்ஸ் கடையில் வேலை செய்து வந்ததாகவும், தன்னை சிலர் காரில் கடத்திச்சென்று, மயக்க மருந்து செலுத்தி தனது சிறுநீரகத்தை திருடிவிட்டதாகவும் கூறினார். அந்த வாலிபரின் அடிவயிற்றில் காய தழும்பு இருந்தது.
அதைத்தொடர்ந்து, அந்த வாலிபரை ஆட்டோ டிரைவர்கள் கோவை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவை சந்தித்து அந்த வாலிபர் புகார் மனு கொடுத்தார்.
அதில்,
தென்காசி அருகே உள்ள தேசியம்பட்டியைச் சேர்ந்த நான், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள ஒரு சிப்ஸ் கடையில் வேலைக்கு சேர்ந்தேன். எனது ஊரைச்சேர்ந்த காளிராஜ், சிவா ஆகியோரும் அங்கு வேலை செய்து வந்தனர். அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் டிரைவர் எங்களை காரில் அழைத்துச் சென்றார். காரில் சில வாலிபர்கள் இருந்தனர்.
அவர்கள் எங்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வாங்கி கொடுத்தனர். சாப்பிட்டு முடித்ததும், திடீரென்று ஸ்பிரே மூலம் மயக்க மருந்தை முகத்தில் தெளித்தனர். மயங்கி விழுந்த பின்னர் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. ஒரு ரயில் தண்டவாள பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்தோம்.
எங்களை அங்குள்ள தமிழர் ஒருவர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நான் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் கோவைக்கு லாரியில் வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சுடலையை அரசு மருத்துவமனைக்குப் போலீஸார் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சோதனைகள் நடத்தப்பட்டன. ஸ்கேன் செய்து பார்த்தபோது சுடலைக்கு இரு சிறுநீரகங்களும் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து டாக்டர் சிவப்பிரகாசம் கூறுகையில், சம்பந்தப்பட்ட நகருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருக்கு இரு சிறுநீரகங்களும் இருப்பது தெரிய வந்தது. அவை திருட்டுப் போகவில்லை. அதேசமயம், அவரது அடி வயிற்றில் காயத் தழும்பு காணப்படுகிறது. அது எப்படி வந்தது என்பது தெரியவில்லை. அதுகுறித்து சுடலையிடம் கேட்டுள்ளோம் என்றார்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications