விபச்சார வழக்கு-18 ஆண்டுகளுக்குப் பின் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட டிஎஸ்பி
ஊட்டி: விபச்சார வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் டிஎஸ்பி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1987-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த எத்திராஜ் என்பவர் குற்றப் பிரிவு டிஎஸ்பியாக இருந்தார். அப்போது 6.4.87 அன்று குன்னூர் அருகே உள்ள வெலிங்டனை சேர்ந்த சசிகலா, விஜயா ஆகிய 2 பெண்களை காணவில்லை என்று அவர்களது தந்தை சாந்தா குரூஸ் புகார் செய்தார்.
இதை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். விசாரணையில், கடத்தல் சம்பவத்தில் சென்னை ஆழ்வார்திருநகரை சேர்ந்த மேரிகுட்டி என்ற பி.டி.தங்கம் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. மேரிகுட்டி பெண்களை விபசாரத்திற்கு அனுப்பி வைக்கும் புரோக்கர்.
சசிகலா, விஜயா ஆகிய இருவரையும் எத்திராஜ்தான், சென்னையில் நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி விபசாரத்திற்கு அனுப்பி வைத்ததும் தெரிய வந்தது. இதைதொடர்ந்து மேரிகுட்டி, எத்திராஜ் ஆகிய 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் மீது ஊட்டியில் உள்ள மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த, மாவட்ட கோர்ட் குற்றப்பிரிவு எத்திராஜ் மற்றும் மேரிகுட்டி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது. சென்னை உயர்நீதிமன்றமும், பின்னர் உச்சநீதிமன்றமும் இதை உறுதி செய்தன.
இதெல்லாம் நடந்து முடிய 18 ஆண்டுகளாகி விட்டது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததைத் தொடர்ந்து எத்திராஜ், மேரிகுட்டி ஆகிய 2 பேரையும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.
இதன்படி எத்திராஜை சென்னையில் கைது செய்து, நேற்று ஊட்டியில் உள்ள மாவட்ட கோர்ட்டு கூடுதல் நீதிபதி நாராயணசாமி முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள்.
கூடுதல் நீதிபதி நாராயணசாமி அவருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தண்டனையின்படி கோவை மத்திய சிறைச்சாலையில் எத்திராஜை அடைக்க உத்தரவிட்டார். மேரிக்குட்டி என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications