இஸ்ரோவின் புதிய திரவ ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி!
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மகேந்திரகிரி மலைப் பகுதியில் உள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ராக்கெட் சோதனை மையம்.
இந்திய ராக்கெட்டுகளுக்கு உந்து சக்தி தரும் திட, திரவ எரிபொருள்கள் இங்கு தான் சோதனையிடப்படுகின்றன.
அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு பயன்படும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்களை செலுத்த எடை குறைந்த திரவ என்ஜின்கள் பயன்படுகின்றன.
இதுவரை வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான என்ஜின்களையே இந்தியா பயன்படுத்தி வருகிறது. இப்போது உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் இந்த என்ஜின்களை இஸ்ரோ உருவாக்கி வருகிறது.
தகவல் தொடர்புக்கு உதவும் ஜி-சாட் 4 செயற்கைகோளை, ஜி.எஸ்.எல்.வி. மார்க்- 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த முயற்சி நடக்கிறது.
இதில் பயன்படுத்தப்படும் எல்110 டி2 திரவ என்ஜினின் சோதனை, கடந்த மார்ச் 5ம் தேதி மகேந்திரகிரி மையத்தில் நடந்தது.
ஆனால், அப்போது 200 வினாடிகளுக்கு இயங்க திட்டமிடப்பட்ட என்ஜின் 150 வினாடிகள் மட்டுமே இயங்கியது. இதனை வெற்றி என அப்போது அதிகாரிகள் கூறினாலும் மீண்டும் 200 வினாடிகளுக்கு என்ஜினை இயக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கான பணிகள் கடந்த 5 மாதங்களாக இரவு பகலாக நடந்தன.
நேற்று மாலை 3.50 மணிக்கு மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் என்ஜின் 200 வினாடிகள் இயங்கி முழுமையான வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுவரை, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளின் தொழில்நுட்பத்துடன் கூடிய என்ஜின்களை தனது ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளில் பயன்படுத்தி வந்த இந்தியா, இனிமேல் தானே உருவாக்கிய என்ஜினால் ஆன ராக்கெட்டுகளை பயன்படுத்த முடியும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!













Click it and Unblock the Notifications