ஜெ.வுக்கு மிரட்டல்-குஷ்பு பேச்சு: கோட்டை முன்பு போராடிய அதிமுக பெண் பிரமுகர்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களைக் கண்டித்தும், ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசிய நடிகை குஷ்புவைக் கண்டித்தும், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முன்பு உண்ணாவிரதப் போராட்டத்த தொடங்கிய அதிமுக பெண் பிரமுகரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளராக இருப்பவர் புவனேஸ்வரி. இவர், நேற்று பகல் 11.30 மணியளவில் சென்னை கோட்டை கொத்தளம் முன்பாக மெயின் ரோட்டில் திடீரென்று கொளுத்தும் வெயிலில் உட்கார்ந்தார். சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அவர் தெரிவித்தார்.
உடனடியாக அங்கு காவல் பணியில் இருந்த உதவி கமிஷனர் காதர்மொய்தீன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் போலீஸ் படையோடு சென்று புவனேஸ்வரியை கைது செய்தனர். பின்னர் புவனேஸ்வரி கோட்டை போலீஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டார்.
அவர் சில துண்டுப் பிரசுரங்களை வைத்திருந்தார். அதில்,ஜெயலலிதாவுக்கு அடிக்கடி மிரட்டல் கடிதங்கள் வந்தவண்ணம் உள்ளது. மீண்டும் இப்போது ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இவ்வாறு மிரட்டல் கடிதங்கள் அனுப்பும் நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு போலீஸ் படை ஒன்றை அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கையும், பெண்களின் பாதுகாப்பையும் நிலைநிறுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்கவேண்டும்.
அ.தி.மு.க. தொண்டர்களாகிய நாங்கள் அனைவரும் உயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளோம். கொலை மிரட்டல் விடுத்தவர்களை உடனே கைது செய்ய வேண்டி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினேன் என்று கூறப்பட்டிருந்தது.
பின்னர் நேற்று மாலை புவனேஸ்வரியை போலீஸார் விடுவித்து அனுப்பி வைத்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications