25 பேர் பலியானதன் எதிரொலி-கள் விற்பனையைக் கைவிட்ட கேரள எம்.எல்.ஏ
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: விஷக் கள் குடித்து 25 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து தனது கள் வியாபாரத்தை கைவிட்டுள்ளார் கேரள எம்.எல்.ஏ ஒருவர்.
மலப்புரம் மாவட்டத்தில் கள்ளில் போதை வேதிப் பொருளை கலந்து கள்ளத்தனமாக விற்றதில் 25 பேர் உயிர் பலி போன விவகாரத்தில் சில அரசியல் புள்ளிகளின் பெயர் அடிப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் எம்எல்ஏ அச்சுதனின் உறவினர் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது என்று எக்சைஸ் அமைச்சர் குருசாதன் சொல்ல பெரும் சர்ச்சை கிளம்பியது.
இதையடுத்து 35 ஆண்டுகள் கள் பிசினசி்ல் ஈடுபட்டு வந்த காங் எம்எல்ஏ அச்சுதன், என் குடும்பத்தினரோ, உறவினர்களோ இனி கள் பிசினஸ் செய்ய மாட்டார்கள் என அறிவித்துள்ளார்.
35 ஆண்டு பிசினசை அவர் ஒரே நொடியில் கைவிட்டுள்ளதால் கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications