மகாராஷ்டிரா, டெல்லி, மே. வங்கத்தில் ரம்ஜான் கொண்டாட்டம்
மும்பை: ரம்ஜான் பண்டிகை நாட்டின் இதர பகுதிகளில் இன்று கொண்டாடப்பட்டது.
இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரம்ஜான் நேற்று தமிழகம், கேரளம் உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் இன்று கொண்டாடப்பட்டது.
இன்று விநாயகர் சதுர்த்தியும் வந்து விட்டதால் இரு பண்டிகைகளையும் இந்துக்களும், முஸ்லீம்களும் சிறப்பாக கொண்டாடினர். இரு பண்டிகைகளும் ஒரே நாளில் வந்ததால் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. மும்பையில் சில இடங்களில் இரு பண்டிகைகளையும் சேர்த்துக் கொண்டாடியதையும் காண முடிந்தது.
மும்பையில் இன்று மெளன்ட் மேரி திருவிழாவும் கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்களின் பண்டிகை இது. இதன் காரணமாக மும்பையில் இந்துக்கள், முஸ்லீ்ம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அவரவர் பண்டிகை காரணமாக உற்சாக கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்தனர்.
டெல்லியிலும் ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. தர்ஹாக்கள், மைதானங்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன.


Click it and Unblock the Notifications
