கருணாநிதி தற்போது பேசுவதெல்லாம் தேர்தலுக்காகவா? டி.ராஜா கேள்வி
திருச்சி: முதல்வர் கருணாநிதி தற்போது பேசுவதெல்லாம் தேர்தலுக்காகவா என்பதை அவர்தான் விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா.
திருச்சியில், மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைக்கூட்டம் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் ராஜா பேசியதாவது:
குடியிருக்க வீடு கேட்டு, செப்.,13ல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அதிலுள்ள குறைபாட்டை களைந்து, செம்மைப்படுத்தச் சொல்கிறோம். புதுச்சேரியில் வீடு கட்ட இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. வெறும் 75 ஆயிரம் ரூபாயில் எப்படி வீடு கட்டமுடியும்? சமத்துவப்புரத்தில் அரசு வீடு கட்டிக் கொடுக்கும் அளவு பணத்தையாவது வழங்க வேண்டும்.
கான்கீரிட் வீடு, மக்கள் வசிக்கும் அளவுக்கு வசதியான வீடாக இருக்கவேண்டும். பறவை வசிக்கும் கூடு போல இருக்கக்கூடாது. பட்டா நிலத்தில் குடிசையில் வசிப்பவருக்கே வீடு என்கின்றனர். அரசு மற்றும் புறம்போக்கு நிலத்தில் பட்டா இல்லாமல் வசிப்பவர்கள் அனாதைகளா?
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றவேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு. தேர்தலுக்காக முதல்வர் கருணாநிதி பேசுகிறாரா? என்பதை நீங்கள் தான் அவரிடம் கேட்கவேண்டும். வீணாகும் உணவுத் தானியத்தை மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும் என, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்த கருத்து தேவையற்றது, ஏற்புடையது அல்ல.
எங்களது கட்சி தற்போது அ.தி.மு.க., கூட்டணியில் நீடிக்கிறது. தேர்தலின்போது கூட்டணி குறித்து முடிவெடுப்போம். பெரியார், அண்ணா ஆகியோரை சந்திக்காவிட்டால் கம்யூனிஸ்ட்டாக இருந்திருப்பேன் என்று முதல்வர் கருணாநிதி சொன்னது தவறானது. நாங்கள் எப்போதும் கொள்கை மாறியது இல்லை. பகுத்தறிவு கொள்கையை கொண்ட தி.மு.க., கட்சி பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தனர். நாங்கள் பா.ஜ.,வுடன் எப்போதும் கூட்டு வைக்கவில்லை. உழைக்கும் மக்களுக்கு, ஏழைக்காக தொடர்ந்து போராடுவது, மதவாத சக்திகளை தொடர்ந்து எதிர்ப்பது என்ற கொள்கையை கைவிடவில்லை என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications