கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்ட அரசு டிரைவர்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக கார் டிரைவர் பாலகுமார், மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் உள்ள கார்ஷெட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக கார் டிரைவராக இருந்தவர் பாலகுமார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கார்ஷெட்டில் இரவு 8 மணி அளவில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மற்ற டிரைவர்கள் தங்களது காரை நிறுத்தச் சென்ற போது, பாலகுமார் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிச்சி அடைந்து, இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய போலீசார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பாலகுமார் தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவர் பாலகுமாருக்கு ஒரு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+