காங்கிரஸும் திருச்சியில் கூட்டம்-சோனியா காந்தி பேசுகிறார்
சென்னை: அதிமுக, திமுகவைத் தொடர்ந்து காங்கிரஸும் திருச்சியில் பொதுக் கூட்டம் போடுகிறது. இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தியே பங்கேற்கவுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார்.
கோவையில் அதிமுக முதலில் பிரமாண்ட கூட்டத்தைக் கூட்டி அனைவரையும் அதிர வைத்தது. இதையடுத்து திமுக சார்பிலும் ஒரு கூட்டத்தைக் கூட்டி முதல்வர் கருணாநிதி அதில் பேசினார். அதன் பின்னர் காங்கிரஸ் சார்பில் ஒரு பொதுக் கூட்டம் போட்டனர். அதில், ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி ஆகியோர் பேசினார்கள்.
பின்னர் திருச்சியில் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்ட கூட்டம் நடந்தது. இதற்குப் போட்டியாக முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட கூட்டம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸும் சோனியா காந்தியை வரவழைத்து திருச்சியில் பிரமாண்டக் கூட்டத்தைப் போடவுள்ளதாம்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழா சிறப்பு பொதுக் கூட்டம் மற்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள்
இணையும் விழா அக்டோபர் 9ம் தேதி மாலையில் திருச்சியில் நடைபெறுகிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பாக கொண்டாப்படும் இவ்விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி பங்கேற்கிறார்.
இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றபார்கள்.
அக்டோபர் 9ம் தேதி காலையில் புதுச்சேரியில் நடைபெறும் அரசு விழாவில் சோனியா காந்தி பங்கேற்கிறார் என்றார் தங்கபாலு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications