திருப்பதி மலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்-பக்தர்கள் பீதி
திருப்பதி : திருப்பதி கோவிலுக்குச் செல்லும் மலையில் மீண்டும் சிறுத்தை நடமாட ஆரம்பித்துள்ளது. இதனால் மலைப் பாதை வழியாக செல்ல பக்தர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
திருப்பதி மலைப்பாதையில் கடந்த 2 மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் காரணமாக பீதி நிலவி வருகிறது. அவற்றைப் பிடிக்க 7 கூண்டுகள் வைக்கப்பட்டன. அதில் 2 சிறுத்தைகள் பிடிபட்டன. இதனால் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.
இதையடுத்து மலைப்பாதையில் பக்தர்கள் மாலையில் நடந்து செல்ல விதிக்கப்பட்ட தடையை தேவஸ்தானம் நீக்கியது. தற்போது பிரமோற்சவ விழா நடப்பதால் 19-ந் தேதி வரை 24 மணி நேரமும் கால்நடை பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் அந்த வழியாக நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் கால் நடை பாதையில் உள்ள காளிகோபுரம் அருகே பெரிய சிறுத்தை பக்தர்களை நோக்கி சீறி வந்தது. இதைப் பார்த்து, அங்கு நடந்து வந்து கொண்டிருந்த கர்நாடகத்தைச் சேர்ந்த பயந்து அலறி கோவிந்தா கோவிந்தா என்று கூக்குரலிட்டனர்.
ஆனால் சிறுத்தை நகராமல் இருந்தது. இதைப் பார்த்த பக்தர்கள் அலறி அடித்து ஓடினர். இதைத் தொடர்ந்து காட்டுக்குள் ஓடி விட்டது சிறுத்தை. இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் காளி கோபுரத்திற்கு விரைந்தனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள் அந்தப் பாதை வழியாக சென்றனர்.
இந்த சிறுத்தைதான், சமீபத்தில் 2 சிறுமிகளைத் தாக்கிய சிறுத்தையாக இருக்கக் கூடும் என வனத்துறையினர் கருதுகிறார்கள். ஏற்கனவே இந்த சிறுத்தை ரத்தம் பார்த்துள்ளதால், இதைப் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications