செப் 20 முதல் நாடு தழுவிய பெட்ரோல் பங்க் ஸ்ட்ரைக்!
Subscribe to Oneindia Tamil

பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் தங்களுக்கான கமிஷன் தொகை உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஸ்ட்ரைக்கை அகில இந்திய பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு நடத்துகிறது.
இந்த அமைப்பின் கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அஜய் பன்சால் கூறுகையில், "பெட்ரோலியப் பொருள்கள் விற்பனையில் எங்களுக்கு குறைந்த பட்சம் 5 சதவீதம் கமிஷன் தொகை வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
எங்களது கோரிக்கையை பெட்ரோலிய அமைச்சகம் நிராகரித்து விட்டது. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர்வோம்..," என்றார்.












Click it and Unblock the Notifications