திமுகவுக்கு எதிராக ஆவேச அலை-இனி வெல்லவே முடியாது:-வைகோ

பேரறிஞர் அண்ணாவின் 102வது பிறந்த நாளையொட்டி இன்று காஞ்சிபுரத்தில் மதிமுக திறந்தவெளி மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்ட வைகோ பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ம.தி.மு.க.வின் நீண்ட நாள் கனவு இன்று நனவாகிறது. அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டினை அவர் பிறந்த செப்டம்பர் 15ந் தேதி காஞ்சீபுரத்தில் நடத்துகிறோம். இந்த மாநாடு மகத்தான வெற்றிபெறும்.
அண்ணா பிறந்தநாள் விழாவை ம.தி.மு.க. வரலாற்று கடமையாக கொண்டாடுகிறது. கடந்த 1998ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை அழைத்து மெரினா கடற்கரையில் பல லட்சம் பேர் திரண்ட மறுமலர்ச்சி பேரணியை ம.தி.மு.க. நடத்திக்காட்டியது. அண்ணா நூற்றாண்டு தொடக்க விழாவை மதுரையிலும், நிறைவு விழாவை திருச்சியிலும் நடத்தினோம். 102 வது பிறந்த நாள் விழாவை அவர் கண் மலர்ந்த காஞ்சியில் நடத்துகிறோம்.
அண்ணாதான் எங்களுக்கு தலைவர். அவர் தான் எங்கள் வழிகாட்டி. இந்த மாநாட்டில் கூட அண்ணாவைத்தான் முன்னிலைப்படுத்துகிறோம்.
மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளை ம.தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது. தி.மு.க. அரசை எதிர்த்து ஒரு ஆவேச அலை வீசுகிறது. தேர்தலில் இனி தி.மு.க. கூட்டணி வெற்றி பெற முடியாது. அ.தி.மு.க. கூட்டணிதான் வெற்றிபெறும். இதற்கு எடுத்துக்காட்டுதான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நடத்திய கோவை, திருச்சி பொதுக் கூட்டங்களில் லட்சோபலட்சம் மக்கள் பங்கேற்றது.
எங்களது மாநாட்டுக்கு அதிமுக சார்பில் பிரதிநிதிகளாக ஜெயக்குமாரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அனுப்பி வைக்கிறார் என்றார் வைகோ.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications