தமிழக ஆட்சியை மாற்ற மக்களுக்கு வாய்ப்பு தருகிறோம்-பண்ருட்டி ராமச்சந்திரன்
சென்னை: இன்றைய அரசியலில் தே.மு.தி.க. ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது. ஆட்சி மாற்றத்தை காண மக்கள் துடிக்கிறார்கள். மக்களுக்கு அத்தகைய வாய்ப்பை அளிக்க தே.மு.தி.க. தயாராக உள்ளது என்று கூறியுள்ளார் தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள், தே.மு.தி.க. 6-வது ஆண்டு தொடக்கம் ஆகியவற்றைகொண்டாடும் வகையில் வரும் 18-ந் தேதிமாலை 6.30 மணியளவில், சென்னை திரு.வி.க.நகர் டிக்கர்ஸ் சாலையில் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு மக்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். மாவட்ட செயலாளர் வி.யுவராஜ் தலைமை தாங்குகிறார்.
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் கழிந்து, 6-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்றைய அரசியலில் தே.மு.தி.க. ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது. ஆட்சி மாற்றத்தை காண மக்கள் துடிக்கிறார்கள். மக்களுக்கு அத்தகைய வாய்ப்பை அளிக்க தே.மு.தி.க. தயாராக உள்ளது.
இந்த முப்பெரும் விழாவில் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications